பதிவு செய்த நாள்
27
செப்
2019
02:09
கடலுார்:நவராத்திரி விழாவை முன்னிட்டு கடலுார், வண்டிப்பாளையம் பகுதியில் கொலு பொம்மைகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
நவராத்திரி விழா வரும் 29ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு வீடுகள், கோவில், அலுவ லகங்களில் சுவாமி சிலைகள், விலங்குகள், தேச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகை யான பொம்மைகளை கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.இதையொட்டி, கடலுார் அடுத்த வண்டிப்பாளையத்தில் கொலு பொம்மைகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தாண்டு கொலு வைக்க அத்திவரதர் பொம்மைக்கு பொது மக்கள் மத்தியில் அதிக வரவே ற்பு உள்ளது.இதையடுத்து அத்திவரதர் நின்ற கோலம்மற்றும் சயன கோலத்திலான பொம்மை கள் உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளது.
இது குறித்து கொலு பொம்மைகளை தயாரிக்கும் கடலுார் வண்டிப்பாளையத்தை சேர்ந்த கல்யாண்குமார் கூறுகையில், அத்திவரதர் நின்ற கோலம் மற்றும் சயன கோலத்தில் பொம்மைகளை உற்பத்தி செய்து வருகிறோம்.ராமர் சரணாகதி செட், தேசிகர் செட், கருட சேவை செட் உட்பட 100க்கும் மேற்பட்ட பொம்மைகளை தயார் செய்து வருகிறோம்.
பொம்மைகள் 50முதல் 450 ரூபாய் வரை கிடைக்கும்.பொம்மைகள் அமெரிக்கா, கலிபோர் னியா, சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளுக்கும், பெங்களுரூ, கோவை, திருச்சி, சேலம், சென்னை பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்’ என்றார்.