பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில், பிரஜாபிதா பிரம்மாகுமாரி ஈஸ்வர விஷ்வ வித்யாலயத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குகைலிங்கம், ராஜயோகக் கண்காட்சி திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மண்டல பொறுப்பாளர் ராஜேஸ்வரி, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியநாயக்கன் பாளையம் கிளை பொறுப்பாளர் கவுதமி வரவேற்றார்.வாராஹி மந்தராலயத்தின் பீடாதிபதி வாராஹி மணிகண்ட சுவாமிகள், சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று, குகை லிங்கம், கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையி ட்டார்.இதில், ராஜயோக முறைகள், தியானமுறைகள், இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் கூறுகள், வேதங்களின் தத்துவ விளக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சனிக்கிழமை வரை கண்காட்சி நடக்கிறது.