சின்னமனுார் குச்சனூர் கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2019 02:09
சின்னமனுார் : குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நுழைவு பகுதியில் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்த கட்டடம், கோர்ட் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரோட்டோரமாக உள்ள இடங்களை 5 பேர் ஆக்கிரமித்து கட்டுமானங்கள் எழுப்பியிருந்தனர். நீண்ட காலமாக இருந்த ஆக்கிரமிப்பு குறித்து திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணனிடம் புகார் கொடுக்கப் பட்டது. நேரில் ஆய்வு செய்து அதிகாரிகள் துணையோடு ஆக்கிரமிப்பாளர்கள் 4 பேர் வெளியேற்றப்பட்டனர்.
நுழைவு வாசல் அருகே கடை வைத்திருந்த துரைப்பாண்டியன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் ததால், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை. கடந்த வாரம் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. நேற்று 26 ல், உத்தமபாளையம் முனிசிப் உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப் புடன் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.