கூடலுார் : கூடலுார் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழா ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் சார்பில் நடந்தது.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். கோயிலில் பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் கரகாட்டம், கலை நிகழ்ச்சி நடந்தது.மாலையில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதில் பக்தர்கள் சுவாமி வேடங்கள் அணிந்தும், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடனும் உடன் வந்தனர். ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.