திண்டுக்கல் கோயில் உண்டியல் திறப்பு உதவி ஆணையரிடம் மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2019 02:09
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையரிடம், இந்து தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.
கட்சி நிறுவன தலைவர் ரவிக்குமார் தலைமையில் கொடுத்த மனு: இந்து சமய அறநிலைத் துறை சட்டத்தின்படி, கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோயில் நிர்வாகிகள் அல்லது பக்தர்கள் முன்னிலையில் கணக்கிடுதல் வேண்டும். ஆனால், திண்டுக் கல் செல்லாண்டியம்மன் கோயிலில் செயல் அலுவலர், கோயில் நிர்வாகிகள் இல்லாமல் அறநிலைத்துறை ஊழியர்கள் சிலர் உண்டியலை திறந்து காணிக்கைகளை எடுத்து சென்றுள் ளனர்.
உண்டியல் திறப்பின் போது பக்தர்களுக்கோ, பொது மக்களுக்கோ முன்னறிவிப்பு கொடுக்க வில்லை.
யாரிடமும் தெரியப்படுத்தாமல் உண்டியலை திறந்து காணிக்கைகளை எடுத்து சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விதிமீறிய உண்டியல் திறப்பு தொடர்பாக உதவி ஆணையர் விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.