ஊட்டி:எடப்பள்ளி சித்தகிரி, சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி சிலைகள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.குன்னுார் அடுத்துள்ள எடப்பள்ளி சித்தகிரி சாய்பாபா கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
நடப்பாண்டு, நவராத்திரி கொலு விழாவையொட்டி, செப்., 29ம் தேதி முதல், அக்., 8ம் தேதி வரை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் நவராத்திரி கொலு பொம்மைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி சில நாட்களில் நிறைவு பெற உள்ளது