பதிவு செய்த நாள்
27
செப்
2019
02:09
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் சரத் நவரா த்திரி விழா 28ம் தேதி துவங்குகிறது.அதனையொட்டி, வரும் 28ம் தேதி காலை 8:00 மணிக்கு கடஸ்தாபனத்துடன் துவங்குகிறது. 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை தினமும் காலை, மற்றும் மாலை 5:30 மணிக்கு ஸ்ரீசக்ர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்திரி மண்டபத்தில் மேருவிற்கு லட்சார்ச்சனை நடக்கிறது.
காலை 8:40 மணிக்கு துர்கா சப்தசதி பாராயணம், மாலை 4:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம், 5:00 மணிக்கு ஞானாம்பிகை, ஞான மகாலட்சுமி, ஞான துர்கா தேவிகளுக்கு திரி சதி, 5:30 மணிக்கு ஞானாம்பிகைக்கு சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்டோபர் 7ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நவசண்டி ஹோ மம், பூர்ணாஹூதி, 8ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு சுவாசினி பூஜை, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுர மர்தினி புறப்பாடு, விசேஷ அன்னதானம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.