20 ஆண்டுகளுக்கு பின் புரட்டாசி சனியில் மகாளய அமாவாசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2019 01:09
பொள்ளாச்சி: புரட்டாசி சனி, மகாளய அமாவாசையையொட்டி பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை ஒரே நாளில் வருவதால், கோவில்களில் சிறப்பு பூஜைகள் இன்று நடக்கின்றன. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்காக, பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களிலும், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி சனிக்கிழமையில் மகாளய அமாவாசை, 20 ஆண்டுகளுக்கு பின், இந்தாண்டு வந்துள்ளதாகவும்; விசேஷமானதாகவும் கூறப்படுகிறது.