பதிவு செய்த நாள்
28
செப்
2019
01:09
தேனி: மக்களை துன்புறுத்திய மகிசாசுரன் என்ற அரக்கனுடன் ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு, 10 வது நாளில் அரக்கனை வதம் செய்து வெற்றியை கொண்டாடுவதாகவும், அதனை நினைவு கூறும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் உலக நன்மைக்காகவும், தன்னை நம்பும் பக்தர்களை மகாதேவி தோன்றி பிரச்னைகளில் இருந்து காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.
இவ்விழாவில் பல வித அதிசய சக்தி வாய்ந்த பொம்மைகளை கொலுவில் வைத்து பூஜிப்ப தால் அம்பாளின் அருளை பெறலாம். பிரபஞ்ச சக்தியோடு ஆதிபராசக்தியை வழிபடுவதால் நினைத்த காரியம் கைகூடும். இந்த ஆண்டு கொலு செப்., 29ல் துவங்கி அக்., 10ல் நிறைவு பெறுகிறது. கொலு நாளில் மகேஸ்வரி, லட்சுமி, பூதேவி, சரஸ்வதி தெய்வயானை, வள்ளி ஆகிய தேவிகளுக்கும் பூஜை செய்து வழிபடுவர்.
நவராத்திரி கொலுவிற்கென தேனி சமதர்மபுரத்தில் விக்னேஷ் கைவினை பொருட்கள் அங்காடியில் வித விதமான கொலுபொம்மைகள் புதிய வரவாக வந்துள்ளது. புதுச்சேரி டெரோகோட்டா பொம்பை, சென்னை, மானாமதுரை பகுதியில் இருந்து செய்யப்பட்ட வண்ண மண் பொம்மைகள் ஏராளமாக உள்ளன.
கொலுவை அலங்கரிக்க தனி பொம்மைகளாகவும், செட்டுகளாகவும் உள்ளன. ‘செட்’டு களில் 5 முதல் 10 பொம்மைகள் கிடைக்கும். இதில் ராமர் பட்டாபிஷேகம், தசாவதாரம், கும்பாபிஷேகம், விவசாயம், நவக்கிரகம் காதுகுத்து, பெயர் சூட்டு விழா என 28 வகையான ‘செட்’ பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
கொலு பொம்மை வாங்கிய விஜயலட்சுமி கூறுகையில் “நான் நினைத்த காரியம் நிறை வேற வேண்டும் என்ற வேண்டுதலில் பல ஆண்டாக கோயிலில் நடைபெறும் நவராத்திரி கொலு விற்கு பொம்மை வாங்கி வைப்பேன். இதன் பலனாக அடுத்த ஆண் டே அக் காரியம் கைகூடு கிறது. அந்த நம்பிக்கை இன்றும் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் தொடர்கிறேன்,” என்றார். பொம்மை விற்பனையாளர் ஜோதிராஜ் கூறுகையில் “12 ஆண்டாக கொலு பொம்மை வியா பாரம் செய்கிறேன். ஒரு சில பொம்மைகள் வந்தவுடன் வாங்கி சென்று விடும் அளவிற்கு ‘டிமாண்ட்” உள்ளது. தனி பொம்மை ரூ.100 முதல் செட் பொம்மை ரூ.2,500 விலையில் கிடைக் கிறது. வீடுகளில் கொலு வைப்பது அதிகரித்துள்ளதால் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இக் கொலு கலாசாரம் நம்பாரம்பரியம், பழக்க வழக்கம், பண்பாடு ஆகியவற்றை வெளிப் படுத்துவதாக அமைகிறது,” என்றார். தொடர்புக்கு 86089 35004