விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை யொட்டி நந்திகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (செப்., 26ல்) மாலை 4:00 மணி யளவில் பிரதோஷத்தையொட்டி, பிரதோஷ நாயகரான நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பின்னர் அலங்கரிக்கபட்ட நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு மேல் நந்திகேஸ்வரர் ஆலய உள் புறப்பாடு வீதியுலா நடந்தது. ஆதிவாலீஸ்வரரும் சிறப்பு அலங்கார த்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, மயிலம், திருவக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.