திண்டிவனம்: இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.புதுச்சேரி அடுத்த இரும்பை கிராமத்தில், பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது.மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நந்தி மற்றும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.