பதிவு செய்த நாள்
01
அக்
2019
04:10
வீரபாண்டி: ஞானந்தகிரி ஆசிரமத்தில், கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்டையாம் பட்டி, வேலநத்தத்தில், ஞானந்தகிரி ஆசிரமத்தில், நவராத்திரி விழா, நேற்று முன்தினம் (செப்., 29ல்) தொடங்கி, வரும், 8 வரை நடக்கிறது.
இதையொட்டி, ஆசிரமத்தில் ஏழு படி அமைத்து, 100க்கும் மேற்பட்ட சுவாமி பொம்மைகளை வைத்து, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை நடக்கும் பூஜையில், அப்பகுதி குழந்தைகள், விதவித அம்மன் வேடமணிந்து வந்து, பக்தி பாடல்களை பாடி வருகின்றனர். அதேபோல், வேலநத்தம், ஆதிவிநாயகர் கோவிலில், கொலு வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. வரும், 4ல், உலக நன்மை வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடக்கவுள்ளது. வீரபாண்டி அங்காளம்மன், அரியானூர் மகாசக்தி மாரியம்மன் கோவில்களில், கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.