கலியுகத்திற்கு முந்திய யுகங்களான கிருத, திரேதா யுகங்களில் முன்னோர்கள் நேரில் காட்சியளித்து திதி, தர்ப்பணங்களை ஏற்றனர். அப்போது பூமியில் தர்மம் தழைத்து இருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய அன்று, பிதுர் உலகில் இருந்த தசரதர் மகனைக் காண நேரில் வந்தார். துவாபர யுகம் மற்றும் கலியுகத்தில் முன்னோர்கள் நம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்தனர்.ஆனால் சூட்சும வடிவில் நம்மைக் கண்டு ஆசியளிக்கின்றனர்.
வயிற்றில் பிறந்தால் மட்டும் ஒருவர் மகனாகிவிட முடியாது. அதற்கான தகுதி வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரை ஆதரிப்பதும், இறப்புக்கு பின் பிதுர்கடனை முறையாக செய்வதும் அவசியம். முன்னோருக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கருதுபவன் புத்தியை இழந்த மூடன்”.