அக்கறையுடன் செய்வது சிரார்த்தம். முன்னோர் நற்கதி பெறவும், அவர்களின் ஆசி வேண்டியும், சந்ததியினர் இதைச் செய்கின்றனர். இச்சடங்கை நதிக்கரைகளில் செய்வது வழக்கம். அப்போது சொல்லும் மந்திரத்தின் பொருள் இதோ... “கலியுகத்தில் ஜம்புத்தீவில் பரதகண்டத்தில்... ஆண்டில்... அயனத்தில்.... ருதுவில்.... மாதத்தில்..... பட்சத்தில்... திதியில்.... வாரத்தில்... நட்சத்திரத்தில் எனது பெற்றோரான ...பெயர் கொண்டவருக்கு சிவயோக பிராப்தம் சித்திப்பதன் பொருட்டு, அவரது மகனாகிய நான் இந்த சிரார்த்தத்தை செய்கிறேன். இதனை ஏற்றுக் கொண்டு ஆசியளிக்கும்படி வேண்டுகிறேன்” என்பதாகும். இறப்புக்கு பின்னும் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே இச்சடங்கு முழுமை பெறும்.