கொலு மேடையின் ஆறாம் படியில் மனித பொம்மைகளும், ஏழாம்படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மைகளும் வைக்க வேண்டும். ஒரு மனிதன் பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான் ஆகலாம் என்பதே இதன் பொருள். எட்டாம்படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். நற்குணங்களைக் கடைபிடிக்கும் மனிதன் தேவநிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது. 9ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கவேண்டும். ஆதிபராசக்தி சிலையை நடுவில் வைக்க வேண்டும். தேவநிலையை எட்டியவர்கள் தெய்வநிலைக்கு உயர்வார்கள் என்பதை இது உணர்த்துகிறது.