அம்பிகையின் கூந்தல் அழகை சவுந்தர்யலஹரி ‘துலித தலித இந்தீவர வனம்’ என்றும், ‘ஸஹஜ ஸௌரப்யம்’ என்றும் கூறுகிறது. அம்பாளின் கூந்தல் மலர்ந்த கருநெய்தல் மலர் போல கருப்பாகவும், இயற்கையிலேயே வாசனை மிக்கதாகவும் இருக்கிறது என்பது இதன் பொருள். அவள் பூ வைத்துக் கொள்ளாவிட்டாலும், கூந்தல் எப்போதும் வாசனையாக இருக்கும் என்கிறார் சங்கரர். திருச்சி மலைக்கோட்டையில் ‘சுகந்த குந்தளாம்பிகை’ என்ற பெயரில் அம்மன் காட்சி தருகிறாள்.
இதற்கு ‘வாசனைமிக்க கூந்தலை உடையவள்’ என பொருள். நம்ம மனசு அம்மி அம்மா மனசு பூவு அம்பிகையின் திருவடி, தாமரை மலர் போல மென்மையானது. அப்படிப்பட்ட மெல்லிய பாதத்தை திருமணத்தின்போது, பாறாங்கல்லான அம்மி மீது வைக்க சிவபெருமானுக்கு எப்படி தான் மனம் வ ததோ? என சவுந்தர்ய லஹரி என்னும் அம்பாள் ஸ்தோத்திர நுõலில் கேள்வி கேட்கிறார் ஆதிசங்கரர். இதற்குரிய பதிலை, அவரே, சிவ ஸ்தோத்திர நுõலான சிவானந்தலஹரியில் தெரிவிக்கிறார். “சிவனே! பூவால் ஆன மேடையில் ஆடாமல் பாறை மீது ஏன் ஆடுகிறாய்? பாறாங்கல்லைப் போல மனம் படைத்த பிள்ளையாக நான் இங்கே பிறப்பேன்! எனக்கும் அருள்புரிய வேண்டும் என்பதால் தானே” என்று விடையளிக்கிறார். நமக்கு அம்மி போல கடின மனமாக இருந்தாலும், நம் தாய் அம்பாளுக்கு பூப்போல மனம் இருப்பதால், நாம் பிறவிக்கடலில் இருந்து தப்பி விடலாம் என்கிறார் சங்கரர்.