* தனி மனித ஒழுக்கம் தான் ஒருவனை உயர்த்தும். * எல்லா உயிர்களையும் நேசியுங்கள். அவற்றின் பசி போக்க உணவிடுங்கள். * கடவுள் வழிபாட்டை தனக்கென செய்யாமல் பிறருக்காகவும் செய்யுங்கள். * உடலுக்கு உயிர் போல உலகிற்கும் கடவுள் ஒருவரே. * ஜீவ காருண்யத்தை கடை பிடித்தால் மட்டுமே கடவுளின் அருள் கிடைக்கும். * கடவுளின் திருவடியை மனம் ஒன்றி வணங்குங்கள். * மனதிற்குள் ஒன்றும், வெளியில் ஒன்றுமாக பேசுபவர்களிடம் உறவு கொள்ளாதீர்கள். * உற்சாகத்துடன் பணியில் ஈடுபட்டால் பாதியளவு பணி முடித்ததற்கு சமம். * சோம்பல், பொய், தீய சொற்களை பேசுதல், பொறாமை போன்ற குணங்களை கைவிடுங்கள். * பிரார்த்தனையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். கடவுள் அருள் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். * உலகிலுள்ள எல்லா உயிர்களும் நம் உடன் பிறப்புகளே. * கீழ்த்தரமான எண்ணத்தை விட்டு விடுங்கள். கடவுள் மீது தளராத நம்பிக்கை கொள்ளுங்கள். * உலகம் சிற்றின்பத்தில் நாட்டமுடன் இருக்கிறது. நம் வாழ்க்கை முறை தவறானது என்பதை உணர வேண்டும். * நாம் மனிதப்பிறவி எடுத்ததே கடவுளின் அருள் பெறவே. விடாமுயற்சியுடன் அவரருளைப் பெற முயற்சி செய்ய வேண்டும். * எல்லா உயிர்களிடமும் அன்பும், கருணையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அன்பே நம்மிடம் கடவுளை கொண்டு வந்து சேர்க்கும். * எல்லா உயிர்களும் தன்னுயிராக கருதினால் முகத்தில் இன்ப ஒளி சுடர் விட்டு பிரகாசிக்கும். அதில் எல்லா உயிர்களும் மகிழ்ச்சி பெறும். - சொல்கிறார் வள்ளலார்