திருப்பதி பிரம்மோற்சவம்: கற்பக விருட்ச அலங்காரத்தில் சுவாமி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2019 03:10
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக விருட்ச அலங்காரத்தில் சுவாமி தேவியருடன் வலம்வந்தார்.
திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம், விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக விருட்ச அலங்காரத்தில் சுவாமி தேவியருடன் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமலை பஸ் நிலையத்திலிருந்து துவங்கி அலிபிரி வரையிலும், திருமலையில் உள்ள கருடாத்திரி நகர் சோதனை சாவடியிலிருந்து திருமலை முழுவதும் பல்வேறு கடவுளர் உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பொழுதுபோக்கிற்காக பாபவிநாசம் செல்லும் பாதையில் மலர் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தான அருங்காட்சியகத்திலும் ஏழுமலையானின் ஆபரணங்களின் வீடியோபதிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.