பதிவு செய்த நாள்
09
அக்
2019
04:10
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள். உப்பை லட்சுமியின் அம்சமாகக் கருதி, கிரகப்பிரவேச வீடுகளுக்கு எடுத்துச் செல்வதும் உண்டு. கோயம்புத்துõர் கோனியம்மன் கோயிலில் உப்புக்கூடை சாட்சியாக நிச்சயதார்த்தமே செய்கின்றனர். கோவன் என்னும் அரசன், தன் நாட்டின் காவல் தெய்வமாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். கோனியம்மன் என பெயர் சூட்டினான்.
‘கோனி’ என்றால் அரசி. கோவன் உருவாக்கியதால் கோவன்புத்துõர் என்றழைக்கப்பட்ட இத்தலம் கோயம்புத்துõர் என மருவியது. பிற்காலத்தில் இளங்கோசன் என்னும் மன்னன் இக்கோயிலை பெரியளவில் கட்டினான். கோவை நகரின் பிரதான காவல் தெய்வம் இவள். கோயில் முன்மண்டபத்தில் நவராத்திரி நாயகியரான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை உள்ளனர். கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.
இருப்பிடம்: கோவை டவுன்ஹால் பஸ் ஸ்டாப் அருகில். சிங்காநல்லுõர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ.,