பதிவு செய்த நாள்
10
அக்
2019
03:10
அரவக்குறிச்சி: தான்தோன்றிமலை வெங்கட ரமண சுவாமி கோவிலுக்கு, புரட்டாசி மாதம், நான்காம் சனிக்கிழமை அன்று, திண்டுக்கல் மாவட்டம், கா.சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள், சம்மாளி என்ற ஒற்றைச் செருப்பை தயார் செய்து, கரூர், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமிக்கு காணிக்கையாக கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன், திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர், தாரை, தப்பட்டை முழங்க நேற்று 9ம் தேதி அரவக்குறிச்சி வந்தடைந்தனர். இக்குழுவினரை வரவேற்ற அப்பகுதி மக்கள் சுவாமிக்கு காணிக்கை செலுத்த கொண்டு வந்த சம்மாளி என்ற செருப்பை வணங்கிச் சென்றனர்.