அழகர்கோவில்,மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி தெப்பத்திருவிழா நேற்று நடந்தது.வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னபல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி எழுந்தருளினார். இன்று உற்ஸவ சாந்தியுடன் புரட்டாசி பிரமோற்ஸவ திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.