திண்டிவனம்: திண்டிவனத்தில், சாய்பாபாவின் மகா சமாதி தின விழா நடந்தது. திண்டிவனம் மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள கற்பக விநாயகர் கோவிலில், சீரடி சாய் சக்தி கணேசா மண்டலி டிரஸ்ட் சார்பில், சீரடி சாய்பாபாவின் 101ம் ஆண்டு மகா சமாதி தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 7:30 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 8:00 மணியிலிருந்து யாகசாலை பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. விழாவையொட்டி, சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜை நடந்தது.விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 3:00 மணியளவில், சீரடி சாய்பாபா பட ஊர்வலம், நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சீரடி சாய் சக்தி கணேசா மண்டலி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.