மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீப விழா: அக்.13ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2019 01:10
மதுரை, மதுரை மணிநகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீப திருவிழா அக்.,13 முதல் நவ.,12 வரை நடக்கிறது. தாம என்றால் கயிறு, உதர என்றால் வயிறு. பகவான் கிருஷ்ணரை அன்னை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டு தாமோதர தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இது நடந்த இடமும் கிருஷ்ணர் வளர்ந்த இடமுமான டில்லி அருகே கோகுலத்தில் இவ்விழா ஒரு மாதம் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் கோயில்களில் கோகுலத்தில் கொண்டாடுவது போல் கடைப்பிடிக்கப்படுகிறது. கிருஷ்ணர் காலிய நாகத்தின் மீது நடனமாடியது, நரகாசுரனை வதம் செய்தது, கோவர்த்தன கிரி மலையை சுண்டு விரலால் துாக்கி குடையாக பிடித்தது உள்ளிட்ட கிருஷ்ணரின் தெய்வீக லீலைகள் இம்மாதத்தில் தான் நடைபெற்றது. தாமோதர தீப திருவிழாவை முன்னிட்டு இஸ்கான் ஹரி கிருஷ்ணா கோயிலில் அக்.,13 முதல் நவ.,12 வரை தினமும் மாலை 6:30 மணிக்கு பக்தர்களே நேரடியாக கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டலாம்.