வில்லியனுார்: வில்லியனுார் மற்றும் திருக்காஞ்சி சிவன் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் மற்றும்திருக்காஞ்சியில் உள்ள கங்கைவராக நதீஸ்வரர் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. அதனையொட்டி மூலவர் மற்றும் நந்திக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.பிரதோஷ வழிபாட்டில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.