பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர்,தேன், சந்தனம் உட்பட 16 வகையான பொருட்களில் அபிஷேக, ஆராதனை நடந்தது. அனைவரும் சகல ஐஸ்வர்யத்துடன் வாழ்வதற்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீசிவசக்தி ஆன்மிகப் பணிக்குழுவினர்கள் காசியம்மாள், ஜெயபாண்டியன், வெங்கடஷே், ரவிக்குமார், கார்த்திக் செய்திருந்தனர்.