பதிவு செய்த நாள்
12
அக்
2019
01:10
ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷத்தையொட்டி நடந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், நேற்று பிரதோஷத்தையொட்டி, மூலவர் கைலாசநாதர், ஆதிபராசக்தி மற்றும் நந்தி சிலைகளுக்கு, பால், பழம், பன்னீர், மஞ்சள், தயிர், வெண்ணெய் போன்ற, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. பின், கைலாசநாதர், ஆதிபராசக்தி, நந்தி சுவாமி மலர்கள், காய்கறி, பழங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது.