பல்லடம்:மழை வேண்டி, கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில், சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் காம்பிலியம்மன் கோவில் உள்ளது. முன்னதாக, தீர்த்த கலசம் வைத்து பூஜை நடந்தது. விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து, மழை வேண்டி யாக பூஜை நடந்தது. மேக ராகத்தின் அடிப்படையில், திருஞானசம்பந்தர் அருளிய திருப்திகள் பாடி மழை வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.அம்மனுக்கு, அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காம்பிலியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.