தாண்டிக்குடி : தாண்டிக்குடி இராமர் கோயில் புரட்டாசி திருவிழா மூன்று நாள் நடந்தது. சுவாமி சவுமிய நாராயணப் பெருமாள் பூப்பல்லக்கு, சிம்ம வாகனம், குதிரை வாகனத்தில் நகர் வலம் வருதல் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. விழா நிறைவில் மஞ்சள் நீராட்டு நடந்தது. முன்னதாக அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.