சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. 22–ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறக்கிறார். தொடர்ந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின்னர் 18–ம் படி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்று வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 18–ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதிேஹாமம், வழக்கமான பூஜைகள் நடைபெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 22–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.