பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. தினமும் ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் நாள் விழாவில் சிறுவர்கள் நேர்த்திக்கடனுக்காக விரதம் இருந்து பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.