கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில், கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம், கரூர் நெடுஞ்சாலையில், பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. கிருத்திகை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பழரசம், பன்னீர் முதலிய வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.