பதிவு செய்த நாள்
17
அக்
2019
01:10
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ திருமலைராய பெருமாள் திருக்கோவிலில் இம்மாதம், 19ம் தேதி புரட்டாசி கடைசி வார சனிக்கிழமை விழா நடக்கிறது.
கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வசிக்கும் பக்தர்கள், இக்கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று, குடும்பங்களுடன் ஒன்றுகூடி, பெருமாளை வணங்குவர்.இந்த ஆண்டு திருவிழா இம்மாதம், 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு சுப்ரபாதத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 9:00 மணிக்கு காளிபாளையம் ஊர் பெரியோர்கள் முன்னிலையில், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
தொடர்ந்து, 10:00 மணிக்கு, திவ்யப் பிரபந்த சாற்றுமுறையும், 11:00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் நடூர் பஜனைக்குழுவினரின் நாமசங்கீர்த்தன பஜனைகளும் நடக்கின்றன. மதியம், 1:00 மணிக்கு ஆதிமூலவர், உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத திருமலைராய பெருமாளுக்கு பன்னிரு வகை அபிஷேகத்துடன் அலங்காரத்துடன் பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை, 6:00 மணியளவில் வசந்த பூஜையுடன் விழா நிறைவுறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.