எஜமானன் ஒருவனுக்கு திராட்சை தோட்டம் சொந்தமாக இருந்தது. தோட்டத்திற்கு வேலியிட்டு நடுவில் ஆலை ஒன்றை அமைத்தான். வேலைக்காரன் ஒருவனிடம் தோட்டத்தை குத்தகைக்கு விட்டு, வேறொரு நாட்டுக்கு எஜமானன் புறப்பட்டான். அதன் பின் வேலைக்காரன் பொறுப்பு இல்லாமல் அக்கிரமம் செய்யத் தொடங்கினால் அதன் முடிவு என்னாகும்? வேறு ஒருவனுக்கு தோட்டத்தை கொடுக்க எஜமானன் முடிவு செய்வான். இந்த கதையைப் போலத் தான் இன்றைய உலகம் இருக்கிறது. மலை, கடல், ஆறு என எல்லாம் படைத்த ஆண்டவர் இங்கு எண்ணற்ற உயிர்களையும் படைத்தார். மனிதர்களாகிய நாம் தான் குத்தகைக்கு வந்திருப்பவர்கள். ஆனால், பொறுப்பு இல்லாமல் உலகையே அவரவர் மனம் போல பாழ்படுத்துகிறோம். இப்படி இயற்கையை தொடர்ந்து அவமதித்தால் நிச்சயம் ஒருநாள் அழிக்கப்படுவோம். அப்போது ஆண்டவரால் வேறொரு சந்ததிக்கு இந்த பூமி கொடுக்கப்படும். எனவே, இனியாவது உலகை நேசிப்போம். இயற்கை வளத்தைக் காக்க உறுதி கொள்வோம்.