எல்க்கானா என்பவருக்கு பெனின்னாள், அன்னாள் என இரு மனைவிகள். இதில் மூத்த மனைவியான பெனின்னாளுக்கு மட்டும் குழந்தைகள் இருந்தன. இதனால் அன்னாளை மூத்த மனைவி அவமானப்படுத்தி வந்தாள். குடும்பத்தில் அமைதியை நிலைநாட்ட எண்ணிய எல்க்கானா, “அன்னாளே! ஏன் அழுகிறாய்? உன்னை அரவணைக்க நான் இருக்கிறேன். பத்து குழந்தைகளைக் காட்டிலும் உனக்கு நான் அதிகம் அல்லவா?” என ஆறுதல் அளிப்பான். உண்மையில் எல்க்கானா ஒரு மாறுபட்ட மனிதன் தான். விருப்பு, வெறுப்பு இல்லாமல் இரு மனைவியையும் சமமாக நேசித்தான். ஒருவழியாக ஆண்டவரின் கருணை அன்னாளுக்கு கிடைத்தது. அழகான ஆண்குழந்தை பெற்றாள். ’சாமுவேல்’ என்னும் பெயரில் வளர்த்தனர். குடும்பத்தில் நெருக்கடி உண்டாவது இயல்பு. இந்த தம்பதியர் போல ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால், எல்லா வீடும் அமைதிப் பூங்காவாகி விடும்.