தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சாலிகுளம். இங்குதான் புற்று வடிவாக இருந்து பக்தர்களின் நோயைத் தீர்த்தருள்கிறான் முருகப்பெருமான்! சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, இங்கே வசித்து வந்த முத்துசாமி என்பவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டாராம்! அப்போது முருகப்பெருமான் வயோதிகராக வந்து, புற்று மண்ணையும் பச்சிலையையும் கொடுத்து சாப்பிடச் சொல்ல.. வயிற்று வலி பறந்தே போனதாம்!
பிறகு ருத்திராட்ச மாலையை முத்துசாமியிடம் கொடுத்து, முருகப் பெருமான் மறைய.. அந்த இடத்தில் புற்று உருவானதாகச் சொல்கின்றனர். முருகப் பெருமானே புற்று வடிவில் அருள்பாலித்து வருகிறார் என்பது ஐதீகம்! இதையடுத்து புற்று முருகன் என ஊர்மக்கள் வழிபடத் துவங்கினர். அருகில் முருகப் பெருமானின் திருவுருவ விக்கிரகமும் உள்ளது. தீராத நோயையெல்லாம் தீர்த்து வைப் பானாம் புற்று முருகன்! ஸ்தல விருட்சம் - வேலமரம்! நாகதோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், மஞ்சள் பொடியால் அர்ச்சித்து வழிபட.... விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!