முதலாம் ராஜேந்திர சோழன், தமது வங்கப் படையெடுப்பின்போது, வங்கத்தின் இரண்டாம் மகிபாலனை வென்று, அங்கிருந்த தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி எனும் பஞ்சலோக விக்கிரகத்தினை வெற்றிச்சின்னமாக தனது அரண்மனைக்குக் கொண்டு வந் தார். அதன் பின்னர், முதலாம் குலோத்துங்கன் இக்கோயிலைக் கட்டியபோது, இச்சிலையை இங்கே கொடுத்துச் சென்றார் என்பது வரலாறு. செவ்வக பீடத்தில் தாமரையின் மீது, காளையின் மேல் சதுர தாண்டவம் ஆடும் கோலத்தில் அருள்கிறார் இந்த மூர்த்தி, பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக, பிரதோஷ திருநாளில் மட்டுமே இந்த மூர்த்தி எழுந்தருள்கிறார். அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.