பதிவு செய்த நாள்
24
அக்
2019
12:10
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா காப்புக்கட்டுதலுடன் வரும் 28ல் துவங்குகிறது.
அன்று மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், யாகசாலை பூஜைகள், காப்புக் கட்டுதல், மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வரும் நவ., 1ம் தேதி வரை, காலை, 7:00 மணி, 10:00 மணி, மாலை, 6:30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. நவ., 2ம் தேதி மதியம், 3:15 மணிக்கு சுவாமி வேல் வாங்கும் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி புறப்பாடு, கஜமுகாசூரன், வான கோபன், சிங்கமுகாசூரன், பத்மாசூரன் என, அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. நவ., 3ம் தேதி காலை, 10:30 முதல் 12:30 மணி வரை, வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம், வெள்ளிரதத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது.