உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் ஐப்பசி அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. காலை 12.08 மணியளவில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் துவங்கியது. யாக குண்டத்தில் பால், பழ வகைகள், புடவைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர் செல்லம்மாள்அருணாச்சல குருக்கள் ஆசியுடன் மோகனசுந்தரம் குருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலை யாக குண்டத்தில் கொட்டப்பட்டது. நிகும்பலா யாகத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருக்கோவிலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பிரத்தியங்கிரா தேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.