பதிவு செய்த நாள்
28
அக்
2019
12:10
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தீபாவளியையொட்டி ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின், ஏழாம் படைவீடாக பக்தர்களால் கருதப்படுவது, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில். இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.விடுமுறை மற்றும் சிறப்பு விழா காலங்களில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். தீபாவளி திருநாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை, 5:00 மணி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். விசஷே தினம் என்பதால், நேற்றைய தினம் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவ மூர்த்தி எழுந்தருளினார். மருதமலையில், இன்று முதல், கந்த சஷ்டி விழா துவங்குகிறது. இதனால், மருதமலை திருவிழா கோலம் பூண்டுள்ளது.