மேட்டுப்பாளையம்:போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டி, பக்தர்கள் எமதர்மர் கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.
சிறுமுகை அருகேவுள்ள சென்னம்பாளையத்தில், எமதர்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக எமதர்மர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோவில் வளாகத்தில், இன்பவிநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன.இங்கு தீபாவளிப் பண்டிகையையொட்டி எமதர்மர் சுவாமிக்கும், இன்பவிநாயகர் மற்றும் காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில் பங்கேற்ற பக்தர்கள், திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில், போர்வெல் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித், நலமுடன் மீட்கப்பட வேண்டுமென, பிரார்த்தனை செய்தனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.