பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மகா ரதத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னி ட்டு கடந்த, 30ல், பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டு, பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவில், வரும் டிச.,1ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, டிச.,10ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழா நடக்கும் பத்து நாட்களுக்கு தினமும் காலை, இரவு நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், வீதி உலா வருவர். அதற்கான வாகனங்கள் பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில், ஏழாம் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனி ரதத்தில் வீதி உலாவருவர். இதற் காக ரதம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வரும், 72 அடி உயரமுள்ள மகா ரதம் சீரமைக்கும் பணி நடக்கிறது. இதை முன்னிட்டு மகா ரத பாதுகாப்பை கருதி, இரவு, பகலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.