மயிலம்: திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.மயிலம் அடுத்த வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு வழிபாடுகள் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பகல் 12:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் கோவிலில் மகா ஜோதி காண்பித்தனர்.அமாவாசை ஜோதி தரிசன விழாவில் விழுப்புரம். புதுச்சேரி, திண்டிவனம், பெங்களூரூ போன்ற ஊர்களிலி ருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், மேலாளர் ரவி, குருக்கள் சேகர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.