மந்தாரக்குப்பம்: ஜப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, மேட்டுக்குப்பம் ஆர்ச் எதிரில் உள்ள தில்லை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஜப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஆக்., 27ல்) இரவு 8:00 மணியளவில், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு 10:00 மணியளவில் ஊஞ்சல் உற்சவமும், நள்ளிரவு 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.