விருத்தாசலம்: சிவராத்திரியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு நேற்று (ஆக்., 27ல்) காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு மேல், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.