பதிவு செய்த நாள்
29
அக்
2019
02:10
திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர் கோவிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர் கோவிலில், தனி சன்னதியில் பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலிக்கிறார். இக்கோவில், நவகிரக ஸ்தலங்களுள் ஒன்று. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் பிரவேசிக்கும் போது, குருபெயர்ச்சி விழா நடந்து வருகிறது. இன்று அதிகாலை, 3:49 மணிக்கு, விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு, குருபகவான் இடம் பெயர்ந்தார். இதை ஒட்டி, குருபகவானுக்கு, சிறப்பு அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடந்தது. ஆயிரக்கனக்கான பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர்.