சிவகங்கை : சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் கேதார கவுரி விரத பூஜை நடந்தது. இப் பகுதியை சேர்ந்த நகரத்தார் சிலர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளியன்று இங்குள்ள மகர்நோன்பு பொட்டல் அருகே உள்ள ஆலமரத்தடியில் இப்பூஜையை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு கடந்த விஜயதசமி முதல் அமாவாசை வரை பெண்கள் கவுரி விரதம் இருந்தனர். அக். 27 ல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யாகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து வீட்டில் இருந்து கொண்டுவந்த கேதார் ஈஸ்வரர் சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். 11 வகையான அபிஷேகம், 21 வகையான அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு 21 நாட்களாக பூஜிக்கப்பட்ட கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.