Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்டுத்தேரில் உலா உடையில் ஆடம்பரம் கூடாது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அத்தி வரதர் ஸ்தோத்திரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2019
03:10

ஸர்வாவதார் மூர்த்தீனாம் மேளனம் புண்ய தர்சனம்!
காஞ்ச்யாம் தாருமயீம் தேவத்ருஷ்ட்வா தத்பலமச்னுதே!!

அனைத்து அவதாரங்களும் ஒன்று திரண்ட உருவம் பெற்ற உனது தரிசனம்  புண்ணியமானது. காஞ்சிபுரத்தில் மரப்பிரபுவாக அமர்ந்துள்ள நீ இன்றே எங்களுக்கு தரிசன பலனை அளிப்பாயாக!

ஸ்ரீஹ்ய நந்தபுரி வாசம் ஸ்ரீரங்கபுர சாயினம்!
ஸ்ரீபதிம் ஸ்ரீநிவாஸ்த்வம் ஸ்ரீயம் தேஹி ஜனார்தன்!!

திருவனந்தபுரத்தில் பள்ளி கொண்டவனும் நீயே! ஸ்ரீரங்கத்தில் அருள்பவனும் நீயே ! ஸ்ரீபதி, ஸ்ரீநிவாசனாக இருந்து மக்களை காப்பாற்றும் ஜனார்த்தனா! எங்களுக்கு செல்வங்களை தருவாயாக!

பவகந்தலிதா பத்ஸு நித்ய நெளமித்திகாதிகம்!
ரோகவாத மனக்லேச ரக்ஷணம் க்ரியதாம் ஹரே!!

ஹே ஹரி! இந்த பிறவி என்னும் சம்சார வாழ்வில்  கால மாற்றத்தால் ஏற்படும் நோய், தடை, மனத் துன்பங்களில் இருந்து நிவர்த்தி அளிப்பாயாக!

புத்ரதோஷ நிவ்ருத்யாதி புத்ரலாப பலப்ரதம்!
லோகரக்ஷண தக்ஷத்வத்தர்சனம் ஸர்வ ஸித்திதம்!!

நல்ல குழந்தைகள் இல்லை என்ற குறையையும், குழந்தையே இல்லையே என்ற குறையையும் நீக்கக் கூடியது உன் தரிசனம். நீ அனைத்து உலகையும் காப்பாற்றுவேன் என உறுதி பூண்டவன் ஆயிற்றே! உன் தரிசனத்தால் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும்.

சத்வாரிம் சத்ஸமம் யாவத் வாபீமக்ன கலேவரம்!
அத்ய தர்சன செளபாக்யம் ப்ராப்தம் ச
த்வத்க்ருபாபலாத்!!

40 ஆண்டுகளாக குளத்தில் மூழ்கி இருந்த உன் திவ்ய உடலை இப்பொழுது காணும் பாக்கியத்தை நாங்கள் பெற்றது உனது அணுவினும் மிகச் சிறிய அருளால் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆபதாம் தோஷ ஹர்த்தாராம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயகம்!
ஆயுர் ஆரோக்யம் ஐச்வர்யம் க்ருபயா தீயதாம் ப்ரபோ!!

ஆபத்து காலத்தில் தோஷம் போக்குபவனாகவும்,  அனைத்து செல்வங்களையும் தரக் கூடியவனாகவும் திகழ்கிறாய். உனதருளால் எங்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அளிப்பாயாக.

ராமனுஜனே சம்பூஜ்ய சைதன்யாதிக சோபிதம்!
ஸ்ரீகாஞ்சி நம்பினா நித்யம் சேவனேன விவர்த்திதம்!!

திருக்கச்சி நம்பியின் சேவையாலும், அனைவரும் போற்றும் ராமானுஜன் நாளும் உன்னை வழிபட்டதாலும் உன் சைதன்யம் மெருகு அடைந்தது.

ஸ்ரீரங்கநாத யதிராஜ பதாப்ஜப்ருங்க ஐயப்ப வைத்ய பரிகல்பிதம் ஆதரேண!
ஒளதும்பரஸ்த வரத ஸ்தவ கீர்த்தனேன ஸௌபாக்ய ஸித்திரகிலம் லபதே யசஸ்ச!!

துறவிகளின் ராஜாவாக திகழும் ஸ்ரீரங்கநாத குருவின் திருவடித் தாமரைகளில் அடைக்கலம் புகுந்த வண்டு போல பக்தியுடன் ஐயப்ப வைத்யன் இயற்றிய அத்தி வரதப் பதிகம் படிப்பவர் சவுபாக்கியம் பெற்று புகழுடன் வாழ்வார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar