நெல்லிக்குப்பம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2019 03:10
நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நவம்பர் ஒன்றாம் தேதி முருகன் சக்திவேல் வாங்குதலும், 2ம் தேதி காலை, மஹா அபிஷேகம், மாலை 5 மணிக்கு கம்பம் ஏறுதலும், இரவு 9 மணிக்கு சூரசம்ஹார விழாவும் நடக்கிறது.
3ம் தேதி மாலை திருக்கல்யாணமும் இரவு சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.விழா ஏற்பாடு களை கோவில் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். காராமணிக்குப்பம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலிலும் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.