பதிவு செய்த நாள்
29
அக்
2019
03:10
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில், கந்தசஷ்டி விழா, கொடியேற்றத்துடன் நேற்று 28ம் தேதி துவங்கியது.
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில், வரும் 2ம் தேதி கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று 28 ம் தேதி திங்கள்கிழமை மாலை 5:50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.இரவு சுவாமி வீதி உலா நடந்தது. 31 ம் தேதி வியாழக்கிழமை இரவு 7:00 மணிக்கு தபசு ஏறுதல், சிவப்பெருமானிடம் சூரபதுமன் வரம் பெற்று தாருகா சூரனை வதம் செய்தல் நடக்கிறது. 1ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு முருக பெருமான் காமாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கிக்கொண்டு குதிரை வாகனத்தில் வீதி உலாவாக வந்து, சிங்கமுக சூரனை வதம் செய்தல் நடக்கிறது.
2ம் தேதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு விநாயகர், காமாட்சியம்மன், கைலாசநாதர், வள்ளி தேவசேனா சுப்பரமணியர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.மாலை 4:30 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து முருகர் குதிரை வாகனத்தில் கம்பத்தடிக்கு ஊர்வலமாக சென்று 5:30 மணிக்கு வீரபாகு தேவர் கம்பம் ஏறுதல் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சூரபதுமன் வதம் செய்தல் நடக்கிறது. 8:00 மணிக்கு சக்திவேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப்பரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.கடலுார்கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டிப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் உற்சவம் நடந்தது. மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.தினமும் காலை, மாலை வீதியுலா நடக்கிறது. வரும் 1ம் தேதி மதியம் 12:30 மணிக்கு வீரபாகு சிறை மீட்டல் உற்சவம், சக்திவேல் பெரும் உற்சவம் நடக்கிறது.மூன்றாம் தேதி இரவு 10:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், 11:00 மணிக்கு கொடியிறக்கம், 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
விருத்தாசலம்விருத்தாசலம், மணவாளநல்லுார் கோவிலில் கந்த சஷ்டியையொட்டி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதேபோல், விருத்தாசலம் விருத் தகிரீஸ்வரர் கோவிலில் வன்னியடி பிரகாரத்திலுள்ள வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபராதனை நடந்தது.