பதிவு செய்த நாள்
29
அக்
2019
03:10
சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் அய்யப்ப சேவா ரதயாத்திரை ஊர்வலம் நடந்தது.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் ரதயாத்திரை ஊர்வலம் மாவட்ட முழுவதும் நடக்கிறது. சிறுபாக்கத்திற்கு நேற்று பகல் 1:00 மணியளவில் ரதயாத்திரை வந்தது. சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்தது.தொடர்ந்து, எஸ்.புதுார், வடபாதி, சித்தேரி, பனையாந்துார் கிராமங்களில் ரதயாத்திரை ஊர்வலம் நடந்தது. இதில், அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள் நரேந்திரன், சந்திரசேகர், செல்வம், கோகுல், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.